இந்தத் தோட்டத்து மக்களின் கருத்துபடி, இப்பள்ளி 1947ஆம் ஆண்டு,
தொடங்கப்பட்டது. அச்சமயம் இப்பள்ளியைத் தோட்ட மேலாண்மையினர் கட்டுப்பாட்டில்
இருந்துவந்தது. உண்மையில், இப்பள்ளிக் கட்டடம் 1935ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இக்கட்டடம் ஒரு மருத்துவமனையாக 1947ஆம் ஆண்டு வரை செயல்பட்டது.
1947ஆம் ஆண்டிலிருந்து 1950ஆம் ஆண்டு வரை இக்கட்டடம் தோட்டத்
தொழிலாளர்களின் பிள்ளைகள் படிப்பிற்காகத் தோற்றுவிக்கப்பட்டதாகும். மற்ற பள்ளிகளைப்
போல, இப்பள்ளியையும் பள்ளி மேலாண்மையே கண்காணித்து வந்தது.
இந்த அமைப்பின் செயலாளராக, தோட்ட மேலாளரருக்குப் பொறுப்பு
வழங்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு, முதல் கல்வி அமைச்சு இப்பள்ளியின்பால் அக்கறை கொண்டு
சுமார் 14,000.00 ரிங்கிட் ஒதுக்கீடு வழங்கியது. இப்பணம் தலைமையாசிரியர் அறை,
ஆசிரியர் அறை, நூல் நிலையம், தளவாடப் பொருள் அறை ஆகியவற்றை அமைப்பதற்கு
வழங்கப்பட்டது. இதன் மூலம் மேலும் 1.5 ஏக்கர் நிலத்தில் கட்டடம் ஒன்று உருவானது.
1990ஆம் ஆண்டு டத்தோஸ்ரீ படுக்கா ரஃபீடா அஜிஸ் வாணிபம், பொதுநல அமைச்சர் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினர் சார்பாக 30,000.00 ரிங்கிட்டை, மேலும் இரண்டு வகுப்பறைகள்
அமைக்க வழங்கினார். இப்பணத்தைக் கொண்டு மூன்று வகுப்பறைகள், ஒரு குளியலறை, இரு
கழிவறை கட்டப்பட்டது. அதோடு பள்ளிக் கட்டத்திற்கும் வண்ணம் பூசப்பட்டது.
No comments:
Post a Comment